ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vijay Sethupathi: ’லஞ்சம் தான் ஆனால் தப்பில்லை’ - விஜய் சேதுபதி

Vijay Sethupathi: ’லஞ்சம் தான் ஆனால் தப்பில்லை’ - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

அவங்க மனசு எதிர்பார்க்குறதெல்லாம், நாம அன்பா பாராட்டி சொல்லும் ரெண்டு வார்த்தை தான்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வீட்டு பெண்களுக்கு லஞ்சம் கொடுப்பது தப்பில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

  சமையல் கலை மற்றும் விதவிதமான உணவு வகைகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் பல முன்னணி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதேபோல் யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உணவுக்காக வரவேற்பு எப்போதும் டாப் தான்.

  இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது. உலகின் 40 நாடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாஸ்டர் செஃப்’ என்ற நிகழ்ச்சியை தமிழில் சன் டிவி ஒளிபரப்பவிருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், "நல்லா சமைக்கும் கைக்கு மோதிரமோ, தங்கமோ தரலாம்ன்னு சொல்வாங்க. ஆனா அன்பா சமைச்சு பரிமாறுறவங்களுக்கு எந்த தங்கமும் ஈடாகாது. அது ஒரு குட்டி லஞ்சம் தான், குடுத்தாலும் தப்பில்லை. ஆனா அவங்க மனசு எதிர்பார்க்குறதெல்லாம், நாம அன்பா பாராட்டி சொல்லும் ரெண்டு வார்த்தை தான். அப்படி நம்ம கூடவே இருப்பவங்களின் அசத்தல் சமையலை உலகறிய பாராட்டும் மேடை தான் இது. மாஸ்டர் செஃப் தமிழ் - இது நம் மக்கள் சமைக்கும் டக்கர் சமையல். டேஸ்ட் பண்ண ரெடியா இருங்க" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vijay Sethupathi