சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற எதிர்மறை வேடத்தில் நடித்துவரும் மாரிமுத்து தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். சமீபத்தில் ட்விட்டரில் மாடர்ன் உடை அந்த பெண்ணின் புகைப்படத்துன் 'Can I Call You' என ஒருவர் பதிவிட்டிருந்தார். அது பெண் என நம்பி நடிகர் மாரிமுத்து என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து யெஸ் என செல்போன் எண் பதிவிடப்பட்டிருந்தது. அந்த எண்ணை ட்ரூ காலர் ஆப் மூலம் மாரிமுத்துவின் நம்பர் தான் என நெட்டிஷன்கள் உறுதி செய்தனர்.
இதனையடுத்து மாரிமுத்துவின் மகன், ''இது எனது அப்பாவின் ட்விட்டர் கணக்கு இல்லை, போலியானது என விளக்கமளிக்க, மாரிமுத்துவோ ''ஒரு பொண்ணு நம்பர் கேட்டா கொடுக்கிறதுல என்ன தப்பு? நான் பயந்தவன் கிடையாது'' என்று பேட்டி ஒன்றில் பேசியிருந்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மிக கேவலமான மனநிலை....பிற்போக்கின் உச்சம்...@ActorMarimuthu https://t.co/r0DMJjwce1
— John Mahendran (@Johnroshan) March 5, 2023
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மாரிமுத்துவின் மற்றொரு வீடியோ டிரெண்டாகிவருகிறது. பேட்டி ஒன்றில் மாரிமுத்து பேசியதாவது, ''தமிழ் மணப்பெண் சேலைகட்டிக்கிட்டு ஆடிக்கிட்டே வந்து மணவறையில் தாலி வாங்கக் கூடாது என்பது என் கருத்து. டான்ஸ் முதல் நாளும், கல்யாணத்துக்கு அடுத்த நாளும் ஆடட்டும். கல்யாணத்தன்று பெண் தலை குணிந்து நடந்தால் தான் அழகாக இருக்கும். தலை குணிந்து நடப்பதுதான் பெண்ணுக்கு அழகு. பெண் நிமிர்ந்து நடந்துவந்தால் அசிங்கமாக இருக்காது? என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளர் பெண் டான்ஸ் ஆடுவதும் அழகு தானே சார் எனக் கேட்க, அதெல்லாம் இல்லை, நீங்கள் தமிழரா?, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி பேசுவார்கள் என மாரிமுத்து அதிரடியாக பேசினார். மேலும் ஆணுக்கு அரையடி பின்னே பெண் நடந்துவருவதுதான் அழகு. இது பிற்போக்கு அல்ல. முற்போக்கு என பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், மிக கேவலமான மனநிலை.... பிற்போக்கின் உச்சம்... என விமர்சித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sun TV