முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ஏம்மா ஏ...' - வித்தியாசமாக மகளிர் தின வாழ்த்து சொன்ன ’எதிர்நீச்சல்’ மாரிமுத்து - வைரலாகும் வீடியோ

'ஏம்மா ஏ...' - வித்தியாசமாக மகளிர் தின வாழ்த்து சொன்ன ’எதிர்நீச்சல்’ மாரிமுத்து - வைரலாகும் வீடியோ

மாரிமுத்து

மாரிமுத்து

மாரிமுத்து மகளிர் தின வாழ்த்து சொன்ன வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகிவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற எதிர்மறை வேடத்தில் நடித்துவரும் மாரிமுத்து தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். சமீபத்தில் ட்விட்டரில் மாடர்ன் உடை அந்த பெண்ணின் புகைப்படத்துன் 'Can I Call You' என ஒருவர் பதிவிட்டிருந்தார். அது பெண் என நம்பி நடிகர் மாரிமுத்து என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து யெஸ் என செல்போன் எண் பதிவிடப்பட்டிருந்தது. அந்த எண்ணை ட்ரூ காலர் ஆப் மூலம் மாரிமுத்துவின் நம்பர் தான் என நெட்டிஷன்கள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து மாரிமுத்துவின் மகன், ''இது எனது அப்பாவின் ட்விட்டர் கணக்கு இல்லை, போலியானது என விளக்கமளிக்க, மாரிமுத்துவோ ''ஒரு பொண்ணு நம்பர் கேட்டா கொடுக்கிறதுல என்ன தப்பு? நான் பயந்தவன் கிடையாது'' என்று பேட்டி ஒன்றில் பேசியிருந்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மாரிமுத்து மகளிர் தின வாழ்த்து சொன்ன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில் எதிர்நீச்சல் தொடரில் தன்னுடன் நடிக்கும் நடிகையை ஏம்மா ஏ என அதட்டும் தொணியில் கூப்பிட்டு, மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேட்டி ஒன்றில் மாரிமுத்து பேசியதாவது, ''தமிழ் மணப்பெண் கல்யாணத்தன்று குணிந்து நடந்தால் தான் அழகாக இருக்கும். பெண் நிமிர்ந்து நடந்துவந்தால் அசிங்கமாக இருக்காது? என்று பேசியது சர்ச்சையானது.

First published:

Tags: Sun TV