சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் ஆதி குணசேகரன் என்ற எதிர்மறை வேடத்தில் மாரிமுத்து கலக்கி வருகிறார். மதுரை ஸ்லாங்கில் அவர் பேசும் விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
சமீபத்தில் ட்விட்டரில் மார்டன் உடை அணிந்த பெண் புகைப்படத்துடன் 'Can I Call You' என ட்விட்டர் வாசி ஒருவரின் பதிவுக்கு நடிகர் மாரிமுத்து, யெஸ் என தனது செல்போன் எண்ணை பதிவிட்டிருந்தார். இது மாரிமுத்துவின் உண்மையான ட்விட்டர் கணக்கா அல்லது போலியானதா என தெரியாத நிலையில் அந்த நம்பரை ட்ரூ காலர் ஆப் செய்த ரசிகர்கள் அது மாரிமுத்து நம்பர் தான் என உறுதி செய்தனர்.
இந்த விவகாரத்தில் மாரிமுத்துவின் மகன் அகிலன் அளித்துள்ள விளக்கத்தில், அந்த ட்விட்டர் கணக்கு போலியானது. அப்பாவின் போன் நம்பர் அனைவருக்கும் தெரியும். அதனை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
🤷🏻♂️ pic.twitter.com/2rvVKMv2sb
— Jesse Pinkman ❤️ (@Putinism7) March 3, 2023
இந்த நிலையில் மாரிமுத்து சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவருகிறது. அதில் மாரிமுத்துவிடம் சமீபத்திய சர்ச்சை குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, ''ஒரு பொண்ணு நம்பர் கேட்டா கொடுக்கிறதுல என்ன தப்பு? நான் பயந்தவன் கிடையாது'' என்று அதிரடியாக பேசியிருந்தார்.
மேலும் உங்களை சிலர் பூமர் அன்கிள் என்கிறார்களே என தொகுப்பாளர் கேட்க, அதற்கு மாரிமுத்து, நான் சாமி கும்பிட மாட்டேன். நியூமரலாஜி பார்க்க மாட்டேன். 20 வருஷம் அட்வான்ஸ்டா இருப்பேன். மத்தவங்களாம் அரைகுறை நாய்ங்க. இவங்களுக்கு நான் பூமரா தான் தெரிவேன். நான் ஜப்பானில் பிறந்திருக்க வேண்டியவன். தெரியாமல் தமிழ் நாட்டில் பிறந்துட்டேன் என்கிறார்.
சாமி கும்பிட மாட்டேன் என இவர் சொல்லும் இந்த வீடியோவிலும் நெற்றியில் திருநீரும் குங்குமமும் வைத்திருப்பதும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sun TV