விஜய் பற்றி நான் பேசியதை கட் பண்ணிட்டாங்க... பிகில் வில்லன் ஆதங்கம்...!

விஜய் பற்றி நான் பேசியதை கட் பண்ணிட்டாங்க... பிகில் வில்லன் ஆதங்கம்...!
டேனியல் பாலாஜி - நடிகர்
  • News18
  • Last Updated: September 24, 2019, 10:52 AM IST
  • Share this:
விஜய் பற்றி தான் பேசியதை ஒளிபரப்பாமல் கட் செய்துவிட்டதாக படத்தில் நடித்த டேனியல் பாலாஜி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதை நேற்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி ஒளிபரப்பியது.


இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் குறித்து தான் இசைவெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு பகுதியை சன் டிவி, வெட்டி விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “விஜய் அண்ணாவைப் பற்றி நான் பேசியதிலிருந்து, சன் டிவி ஒரு பகுதியை வெட்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் நீங்கள் என்ன பேசினீர்கள். அதை வீடியோவாக பதிவிடுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் நிகழ்ச்சியை நேரில் பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் பெரும்பாலான பகுதிகளை சன் டிவி எடிட் செய்து கட் செய்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க: தமிழன் முதல் பிகில் வரை! தளபதி விஜய் பேசிய அரசியல்

First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...