காப்பான் படத்தைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

news18
Updated: July 11, 2019, 5:10 PM IST
காப்பான் படத்தைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!
காப்பான் படத்தில் சூர்யா - சாயிஷா
news18
Updated: July 11, 2019, 5:10 PM IST
காப்பான் படத்தின் தொலைக்காட்சி உரிமை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், கடந்த ஜூலை 5-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் 'சிறுக்கி' என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியாகும் பாடல் இது.

அரசியல் கலந்த த்ரில்லராக உருவாகியுள்ள காப்பான் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. இதை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் சன் டிவி வெளியிட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

வீடியோ பார்க்க: தனது வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த நண்பருக்காக அதிரடி முடிவெடுத்த சிவகார்த்திகேயன்!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...