சன் டிவியின் அழகு சீரியல் முடிவடைகிறதா? - சின்னத்திரை நடிகரின் திடீர் பதிவு

அழகு சீரியலின் கிளைமேக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக அத்தொடரில் நடித்த நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சன் டிவியின் அழகு சீரியல் முடிவடைகிறதா? - சின்னத்திரை நடிகரின் திடீர் பதிவு
அழகு சீரியல்
  • Share this:
கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் அழகு. இதில் நடிகை ரேவதி அழகம்மை என்ற கதாபாத்திரத்திலும், தலைவாசல் விஜய் பழனிசாமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ருதி ராஜ், விஜே சங்கீதா, மணிகண்டன் ராஜேஷ், லோகேஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ரவி ஆரம்பத்தில் இந்த சீரியலை இயக்கினார். அடுத்து ஓ.என்.ரத்னம், சுந்தரேஸ்வரன் உள்ளிட்ட இயக்குநர்களும் இந்த சீரியலை இயக்கினர். 700 எபிசோட்களைக் கடந்திருக்கும் இத்தொடரை தற்போது ராமச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார்.

கொரோனா பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நடிகை ஊர்வசி இந்த சீரியலில் இணைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து புதிய எபிசோட்கள் படமாக்கப்பட்டன.


இதையடுத்து ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஜூலை 5-ம் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அழகு சீரியல் கிளைமேக்ஸ் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும், சீரியல் முடிவுக்கு வருவதாகவும் அத்தொடரில் நடித்த அவினாஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இதனால் அழகு சீரியலுக்கு சன் டிவி என்ட் கார்ட் போடுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading