மாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

மாஸ்டரை அடுத்து சூரரைப் போற்று திரைப்படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
மாஸ்டர் | சூரரைப் போற்று
  • Share this:
சூரரைப் போற்று திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.


படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வருடம் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது சூரரைப் போற்று திரைப்படமும் சன் டிவி வசம் சென்றுள்ளது.மேலும் படிக்க: நடிகர் சந்தானத்துக்கு நன்றி... யோகி பாபு இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

 
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்