Suriya 40: கையில் வாளுடன் ’சூர்யா 40’ ஹாட் அப்டேட்!

சூர்யா 40

இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

  • Share this:
    இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

    சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 40 என்று குறிப்பிடப்படும், இந்த கிராமத்து திரைப்படம் தவிர, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கிறார் சூர்யா. இது சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. முழுக்க அந்த நாவல் அல்ல, நாவலுக்கு மேலாக வெற்றிமாறன் கற்பனையாக சில பகுதிகளையும் சேர்த்துள்ளார்.



    பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நாயகியாக ப்ரியங்கா அருள் மோகனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

    கிராமத்து கதையான இதில் சூர்யா வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கையில் பெரிய வாள் வைத்திருக்கும் சூர்யாவின், பின்பக்க சில் அவுட் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். சென்டிமெண்டுக்கு நிகராக சண்டைகளும் படத்தில் நிறைந்திருக்கும் என்பதை இந்தப் படம் சொல்லாமல் சொல்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: