Sivakarthikeyan: 75 கோடி சம்பளத்தில் சிவகார்த்திகேயனுக்கு சன் பிக்சர்ஸின் அட்டகாச வாய்ப்பு!

சிவகார்த்திகேயன்

ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என அவர்கள் தயாரித்த மூன்று படமுமே பெரிய பட்ஜெட். இதில் வேலைக்காரனும், சீமராஜாவும் சுமாராகப் போக பல கோடிகள் கடன்.

  • Share this:
    சிவகார்த்திகேயனுக்கு 5 படங்களில் நடிக்க 75 கோடிகள் சம்பளம் பேசியுள்ளது சன் பிக்சர்ஸ். இந்த ஐந்து படங்களை இரு வருடங்களில் எடுத்து முடிப்பதாக காலவரையறையும் நிர்ணயித்துள்ளனர்.

    சிவகார்த்திகேயனின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காதது. மெரினாவில் ஆரம்பித்த பயணம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான் கராத்தே வரை சீராகவே சென்றது. ஒரே படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம். அது வந்ததும் சிவகார்த்திகேயன் படங்களின் வணிக மதிப்பு 30 கோடிகளைத் தாண்டியது. பதினைந்து கோடிகள் வரை சம்பளம் தர முன் வந்தனர்.

    இந்த நேரத்தில் பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது நண்பர் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயனின் ஆரம்ப நாள்களில் அவருக்காக வாய்ப்பு தேடி அலைந்தவர். சிவகார்த்திகேயனை ஸ்டாராக்க விளம்பர வேலைகள் பார்த்தவர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்பது சிவகார்த்திகேயனின் நிறுவனம் என்றே பார்க்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என அவர்கள் தயாரித்த மூன்று படமுமே பெரிய பட்ஜெட். இதில் வேலைக்காரனும், சீமராஜாவும் சுமாராகப் போக பல கோடிகள் கடன். அத்துடன் இன்று நேற்று நாளை ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தை வேறு கமிட் செய்து வைத்திருந்தனர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதாகவும் முடிவாகியிருந்தது.

    இதையடுத்து பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். ஆர்.ரவிக்குமாரின் சயின்ஸ் பிக்ஷன் படம் தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணை தயாரிப்பில் அயலான் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

    கொரோன பேரிடர் சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையையும் சிக்கலுக்குள்ளாக்கியது. அவரது டாக்டர் படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் தங்கள் தளத்தில் வெளியிட தயாராக உள்ளது. நல்ல தொகைக்கு வாங்க விரும்புகின்றனர். ஒரே கண்டிஷன், படத்தின் சேட்டிலைட் உரிமையையும் தங்களுக்கே தர வேண்டும். ஆனால், சேட்டிலைட் உரிமை சன் பிக்சர்ஸிடம் உள்ளது. இதனால் டாக்டர் இன்னும் ஓடிடியில் வெளியாகாமல் உள்ளது.

    இந்நிலையில் தான் சன் பிக்சர்ஸ் இரண்டு வருடம், ஐந்து படங்கள் என்ற புதிய கணக்குடன் சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்ய முன் வந்திருக்கிறது. ஐந்து படங்களுக்கும் சேர்த்து 75 கோடிகள் சம்பளம் பேசியுள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் சிவகார்த்திகேயனுக்கு இது நல் வாய்ப்பு. திரையரங்கு, ஓடிடி, சேட்டிலைட் என எல்லா தளங்களிலும் சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிடும் என்றவகையில் அவர்களுக்கும் பெத்த லாபம்.
    சிவகார்த்திகேயனை இயக்கப் போகும் அந்த ஐந்து இயக்குனர்கள் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: