தனுஷின்
திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை முதல் சரவெடியாய் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என இன்றைய அப்டேட்டில் கூறப்பட்டுள்ளது.
கடைசியாக சன்பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இந்தப் படம் வெற்றிப் பாதையில் திரும்ப வைக்கும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர் தரப்பு உள்ளது.
தனுஷுக்கும் கர்ணன் படத்திற்கு பின்னர் வெளிவந்த ஜெகமே தந்திரம், மாறன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஹாலிவுட் படமான தி கிரே மேனும் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாக உள்ளது.
இதையும் படிங்க - உதயநிதியுடன் மோதும் பகத் பாசில்… மாமன்னன் படத்தில் இந்த கேரக்டரில் நடிக்கிறாரா?
இதனால் தனுஷ் தரப்பும் திருச்சிற்றம்பலம் படம் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இந்த படத்தை தனுஷின் குட்டி, யாரடி நீ மோகினி படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கியுள்ளார். மாரி படத்திற்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பாரதி ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
இதையும் படிங்க - முன்னணி நடிகர்களுக்கு இணையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிரமாண்ட கட்-அவுட்…
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் இன்று வெளியானது.
இதில் நாளை முதல் படத்தில் இடம்பெற்றுள்ள கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
தனுஷ் – அனிருத் காம்போவை ரசிகர்கள் டிஎன்ஏ DnA என்று அழைக்கிறார்கள். அதாவது தனுஷ் அண்டு அனிருத். இந்த காம்போவில் வெளியான பாடல்கள் அனைத்து மெகா ஹிட் ஆனது என்பதால், திருச்சிற்றம்பலம் பட பாடல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.