ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து மாஸ்ஸான 5-வது வீடியோ சாங் ரிலீஸ்…

கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து மாஸ்ஸான 5-வது வீடியோ சாங் ரிலீஸ்…

கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாசுடன் சலார், ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் என 2 படங்களில் பணியாற்றி வருகிறார்.

கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாசுடன் சலார், ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் என 2 படங்களில் பணியாற்றி வருகிறார்.

கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாசுடன் சலார், ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் என 2 படங்களில் பணியாற்றி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கே.ஜி.எஃப். 2 படத்திலிருந்து 5 வது வீடியோ பாடலாக ‘சுல்தானா’ இன்று வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பெற்று வருகிறது.

கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்களில் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் உள்ளிட்டவை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்த அளவுக்கு பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன.

பான் இந்தியா படமாக இவ்விரு படங்களும் உருவான நிலையில், அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் பாடல்களையும் பின்னணி இசையையும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அமைத்திருப்பார்.

இதையும் படிங்க - துபாயில் படக்குழுவினருடன் ஓய்வெடுக்கும் பீஸ்ட் இயக்குனர் நெல்சன்… வைரலாகும் புகைப்படம்

அந்த வகையில் கே.ஜி.எஃப். 2 படத்தில் 5 பாடல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க - தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் இன்னொரு நடிகை யார்?

இதிலிருந்து அகிலம் நீ எனும் அம்மா பாடல், தூஃபான் ஹீரோ அறிமுக பாடல், க்ளைமேக்ஸ் பாடல், மெஹ்பூபா காதல் பாடல் என 4 வீடியோ பாடல்கள் வெளியிடப்பட்டிருந்தன. இவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

' isDesktop="true" id="749019" youtubeid="0JBArPmYf8k" category="cinema">

' isDesktop="true" id="749019" youtubeid="VvTymE--3lc" category="cinema">

' isDesktop="true" id="749019" youtubeid="R4He_Gcn7cA" category="cinema">

' isDesktop="true" id="749019" youtubeid="qoZncUT-B9Y" category="cinema">

இந்நிலையில் கேஜிஎஃப் 2 படத்திலிருந்து கடைசி பாடலாக ‘சுல்தானா’ இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இந்த பாடலின் காட்சிகள் மாஸ்ஸாக வடிவமைக்கப்பட்டிருந்தன. சுல்தானா தற்போது ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் ஷேர்களை அள்ளிக் குவித்து வருகிறது.

கேஜிஎஃப் 2 மெகா வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் 3 உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாசுடன் சலார், ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் என 2 படங்களில் பணியாற்றி வருகிறார்.

' isDesktop="true" id="749019" youtubeid="l7_3r5E7m5w" category="cinema">

படத்தின் ஹீரோ யாஷ் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார். கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு நடத்தப்பட்டு படம் 2024-ல் திரைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by:Musthak
First published:

Tags: KGF 2