Home /News /entertainment /

Sulthan Twitter Review : படம் மரண மாஸ்... கார்த்தியின் சுல்தான் ட்விட்டர் ரிவ்யூ!

Sulthan Twitter Review : படம் மரண மாஸ்... கார்த்தியின் சுல்தான் ட்விட்டர் ரிவ்யூ!

சுல்தான் ட்விட்டர் ரிவ்யூ

சுல்தான் ட்விட்டர் ரிவ்யூ

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் திரைப்படம் குறித்து ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

    இன்று சுல்தான் திரைப்படம் சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமா திரையரங்கில், அதிகாலை முதல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பாக்யராஜ் தனது குடும்பத்துடன் முதல் காட்சியை காணவந்துள்ளார்.

    நடிகர் கார்த்திக் தனது ரசிகர்களுடன் திரைப்படத்தை காண அதிகாலையிலேயேவருகை தந்துள்ளார். திரைப்படத்தின் இசையமைப்பாளர் விவேக் மெர்வின் திரையரங்கு உரிமையாளர் AE. ஞானவேல்ராஜாஆகியோர் முதல் காட்சியை காணவும் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.

    இதனிடையே திரைப்படத்தை அதிகாலையில் பார்த்த பலரும் இணையத்தில் படம் எப்படி இருக்கு? என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    சுல்தான் திரைப்படம் குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள பலரும் முதல் பாதி மிக அருமை எனவும், மரண மாஸ் எனவும், புல்லரிக்கும் படி திரைப்படம் உள்ளதாகவும் பதிவிட்டுள்ளனர். கார்த்தியின் ரசிகர்கள் பலர் திரைப்படத்தை காண ஆவலாக இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Actor Karthi, Actress Rashmika Mandanna

    அடுத்த செய்தி