Sulthan Trailer: கார்த்தியின் சுல்தான் ட்ரெய்லர் ரிலீஸ் - வீடியோ

Sulthan Trailer: கார்த்தியின் சுல்தான் ட்ரெய்லர் ரிலீஸ் - வீடியோ

சுல்தான் பட போஸ்டர்

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் சுல்தான் திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் சிம்பு குரலில் வெளியான ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல’ என்ற பாடலும் ஹிட் அடித்திருக்கிறது.

சுல்தான் படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் படக்குழு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் கார்த்தி, 100 நடிகர்களுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்தது சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார்.



மேலும், படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசும்பொழுது புதிதாக ஒரு தலைமை வரும்போது மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும், அதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம் எனவும் தற்போதைய அரசியல் களத்தையும் மேற்கோள்காட்டி பேசினார்.
Published by:Sheik Hanifah
First published: