கண்ணியத்தை கடைபிடியுங்கள்... விமர்சகர்கள் மீது பாய்ந்த சுல்தான் தயாரிப்பாளர்

கண்ணியத்தை கடைபிடியுங்கள்... விமர்சகர்கள் மீது பாய்ந்த சுல்தான் தயாரிப்பாளர்

சுல்தான் படத்தில் கார்த்தி

சுல்தான் படத்தின் ஒரு சில விமர்சனங்களைப் பார்த்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கோபமடைந்துள்ளார்.

 • Share this:
  ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிடோர் நடிப்பில் நேற்று வெளியான படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

  இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல வசூலைப் பெற்றிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “எங்களுக்கு மிகப்பெரிய வசூலைக் கொடுத்ததில் மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு நன்றி. இதுவரை கார்த்தி நடித்து வெளியான படங்களில் முதல்நாளில் அதிகம் வசூல் செய்தது சுல்தான் தான். இந்தக் கடினமான காலகட்டத்தில் ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் நிவாரணம் போல் சுல்தான் அமைந்துள்ளது. திரையரங்குகள் நிறைந்த காட்சி மகிழ்ச்சியளிக்கிறது.

  எங்களது பல திரைப்படங்களை விமர்சகர்கள் ஆதரித்திருக்கிறார்கள். நான் அதற்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். சிலருக்கு வேறுவிதமான கருத்துகள் இருக்கலாம். அதை நான் மதிக்கிறேன். ஆனால் உங்களது வார்த்தைகளில் கண்ணியத்தை கடைபிடியுங்கள். சாதாரண திரைப்படங்களும் ரசிகர்களும் தான் உங்கள் தட்டுக்கு வரும் உணவுக்கு காரணமாக இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: