• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சுல்தான் சிறப்பு காட்சியை காண திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் கார்த்தி!

சுல்தான் சிறப்பு காட்சியை காண திரையரங்கிற்கு வருகை தந்த நடிகர் கார்த்தி!


சுல்தான்

சுல்தான்

நடிகர் கார்த்திக் ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்துள்ள சுல்தான் திரைப்படம் சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமா திரையரங்கில் இன்று அதிகாலை முதல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது.

  • Share this:
    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

    இத்திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதியான இன்று திரைக்கு வர இருப்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டது. முன்னதாக வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் சிம்பு குரலில் வெளியான ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல’ என்ற பாடலும் ஹிட் அடித்திருக்கிறது.

    இந்நிலையில் நடிகர் கார்த்திக் ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்துள்ள சுல்தான் திரைப்படம் சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமா திரையரங்கில் இன்று அதிகாலை முதல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பாக்யராஜ் தனது குடும்பத்துடன் முதல் காட்சியை காணவந்துள்ளார்.



    நடிகர் கார்த்திக் தனது ரசிகர்களுடன் திரைப்படத்தை காண அதிகாலையிலேயேவருகை தந்துள்ளார். திரைப்படத்தின் இசையமைப்பாளர் விவேக் மெர்வின் திரையரங்கு உரிமையாளர் AE. ஞானவேல்ராஜா ஆகியோர் முதல் காட்சியை காணவும் திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.

    முன்னதாக சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் கார்த்தி, 100 நடிகர்களுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்தது சவாலாக இருந்ததாக குறிப்பிட்டார்.



    மேலும், படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசும்பொழுது புதிதாக ஒரு தலைமை வரும்போது மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும், அதற்கு தமிழ்நாடு சிறந்த உதாரணம் எனவும் தற்போதைய அரசியல் களத்தையும் மேற்கோள்காட்டி பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: