Sulthan: ’மார்க் போட வேணாம், குடும்பத்தோடு பார்த்து ரசிங்க’ - சுல்தான் குறித்து கார்த்தி!

Sulthan: ’மார்க் போட வேணாம், குடும்பத்தோடு பார்த்து ரசிங்க’ - சுல்தான் குறித்து கார்த்தி!

’சுல்தான்’ கார்த்தி

யாரும் படத்தை பார்த்து மார்க் போட வேண்டாம் குடும்பத்தோடு பார்த்து ரசியுங்கள், காமெடி எமோஷன் ஆக்ஷன் என அனைத்தும் நிறைந்துள்ள படம் சுல்தான் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    யாரும் படத்தை பார்த்து மார்க் போட வேண்டாம் குடும்பத்தோடு பார்த்து ரசியுங்கள், காமெடி எமோஷன் ஆக்ஷன் என அனைத்தும் நிறைந்துள்ள படம் சுல்தான் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் -மெர்வின் இசையமைத்துள்ளனர்.

    இன்று சுல்தான் திரைப்படம் சென்னை பாடியில் உள்ள கிரீன் சினிமா திரையரங்கில், அதிகாலை முதல் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அங்கு வந்தார் நடிகர் கார்த்தி. அதோடு படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணனும் தனது குடும்பத்துடன் முதல் காட்சியை காண வந்தார். திரைப்படத்தின் இசையமைப்பாளர் விவேக் மெர்வின், திரையரங்கு உரிமையாளர் KE.ஞானவேல்ராஜா ஆகியோர் முதல் காட்சியை காணவும் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி,

    ”3 மாதத்திற்கு பிறகு திரையரங்கில் திரைப்படங்கள் வெளியாகிறது. கிட்டத்தட்ட 3 வருடம் நேரத்தை இந்த படத்திற்கு நேரம் செலவழித்து, ஒரு வருடம் கொரோனா காலத்தில் பொறுமையாக, குறிப்பாக திரையரங்கில் தான் கொண்டு வர வேண்டும் என தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுத்து, இந்த திரைப்படம் தற்போது திரையரங்கில் வெளியாகியிருக்கிறது.

    பாக்கியராஜின் பணிகள் மிகவும் பிரமாதமாக இருக்கிறது திரையரங்கில் ரசிகருடன் படத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. யாரும் படத்தை பார்த்து மார்க் போட வேண்டாம். குடும்பத்தோடு பார்த்து ரசியுங்கள். காமெடி, எமோஷன், ஆக்ஷன் என அனைத்தும் நிறைந்துள்ள படம். எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. காலையில் முதல் காட்சி பார்க்க நீங்கள் எல்லோரும் வந்தது மிகவும் சந்தோஷம். மரண பயம் போய் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக குடும்பத்தோடு படத்தை பாருங்கள்” என்றார்.

    நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்,

    4  வருடம் கழித்து  ரெமோ திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய படம் வெளியாகியிருக்கிறது. அதுவும் கொரோனாவின் தாக்கங்கள் முடிந்து மிகப் பெரிய பிரச்னைகளுக்குப் பிறகு சினிமாவை மக்கள் பார்ப்பது மிக சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் என்னுடைய திரைப்படம் திரையில் வெளியானதற்கு எல்லோருடைய ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. குடும்பத்துடன் சந்தோஷமாக எல்லோரும் வந்து திரையரங்கில் படத்தை பார்த்து சந்தோஷப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    செய்தியாளர் - கன்னியப்பன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: