Home /News /entertainment /

சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி மோசடி வழக்கு - குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சேர்ப்பு

சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி மோசடி வழக்கு - குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சேர்ப்பு

ஜாக்குலின் - சுகேஷ் சந்திர சேகர்

ஜாக்குலின் - சுகேஷ் சந்திர சேகர்

விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி பணமோசடி வழக்கில், அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் இன்னும் எடுத்துக் கொள்ளாததால், ஜாக்குலினை இப்போது கைது செய்ய முடியாது. இருப்பினும் அவர் வெளிநாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார். சுகேஷ் சிறையில் இருந்தபோது ஜாக்குலின் அவருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த காலங்களில் ஜாக்குலினிடம் அமலாக்க இயக்குநரகம் பலமுறை விசாரணை நடத்தியது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சுகேஷ் சந்திரசேகருடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் ஜாக்குலின் அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

    தேங்க்யூ ஷங்கர் சார்... அதிதி ஷங்கர் உருக்கமான பதிவு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு 10 கோடி அளவில் பரிசுப் பொருட்கள் வாங்கிக்கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸையும் குற்றவாளியாக சேர்த்துள்ளது. இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Jacqueline Fernandez

    அடுத்த செய்தி