பாரதி கண்ணம்மாவில் நியூ என்ட்ரி - அகிலன் யார் தெரியுமா?

பாரதி கண்ணம்மா

திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைத்துள்ளதால், பாரதி கண்ணம்மா சீரியலுக்கு போதுமான நேரத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை என்று அகிலன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
பாரதி கண்ணம்மாவில் நடித்துக் கொண்டிருந்த அகிலன் விலகியதால், அகில் கதாப்பாத்திரத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிக்க உள்ளார்.

தமிழ் சீரியல்களிலேயே அதிக முறை டிரெண்டிங்கில் இடம்பெற்ற ஒரு சீரியல் என்றால், கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் ’பாரதி கண்ணம்மா’ என்று. இல்லத்தரசிகளுக்கு பிடிக்கும் அதே அளவுக்கு மீம் கிரியேட்டர்களுக்கான சீரியலாகவும் உள்ளது. இந்த தொடரில் அகில் கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த அகிலன் தற்போது அந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சுகேஷ் சந்திரசேகர் நடிக்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரதி கண்ணம்மாவில் லீட் ரோலில் நடிக்கும் அருணுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், இந்த சீரியலில் அகிலன் கதாப்பாத்திரத்தில் தன்னுடைய புதிய பயணத்தை தொடங்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். எப்போதும்போல் மக்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே ’திருமதி ஹிட்லர்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார். தனக்கு மிகவும் பிடித்தமான ஆஸ்தான இயக்குநரான பிரவீன் பென்னட் இயக்கத்தில் நடிக்க இருப்பது மூலம் கனவு நிறைவேறியிருப்பதாகவும் சுகேஷ் சந்திரேசகர் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சீரியலில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள அகிலன், "தன்னுடைய கனவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான். நிறைய ஷார்ட் பிலிம்கள் பண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறேன். சக நடிகர்கள் அருண், ரோஷ்னி முதல் எல்லோருமே என்னுடைய நல்ல நண்பர்கள்.ஆனால், திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைத்துள்ளதால், பாரதி கண்ணம்மா சீரியலுக்கு போதுமான நேரத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. நேரப்பிரச்சனை காரணமாக நானாகவே சீரியலில் இருந்து விலகிவிட்டேன். பாரதி கண்ணம்மா என்னுடைய பேவரைட் சீரியல். நாங்க எல்லோருமே குடும்பம் மாதிரி பழகிக்கொண்டிருந்தோம். இப்போது அந்த குடும்பத்தை ரொம்ப மிஸ் செய்யப் போகிறேன்" என உருக்கமாகதெரிவித்துள்ளார்.
சீரியலில் இருந்து விலகுவதை அவர் யாரிடமும் சொல்லவில்லையாம். அவர் விலகுவது குறித்த தகவல் தெரிந்தவுடன் மற்ற நடிகர்கள் எல்லாம் ஷாக்காகி, தொடர்ந்து அகிலனுக்கு அழைப்புகள் மேற்கொண்டு காரணத்தை விசாரித்துள்ளார். அவரும் தன் நிலையை எடுத்துக் கூறியவுடன் புதிய பயணத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Also read... பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...!

இப்போது, அவர் விஷாலின் ’வீரமே வாகை சூடும்', 'பீட்சா 3', 'பகீரா' போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டுள்ளார். ஹீரோவைப் போல் மற்ற கதாப்பாத்திரங்களையும் மக்கள் கொண்டுவதாக கூறும் அகிலன், இதுவரை சின்னத்திரையில் வீட்டிலேயே ரசித்த மக்கள் இப்போது வெள்ளித்திரையில் தன்னுடைய நடிப்பை பார்க்கப்போகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: