ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சுதா கொங்கராவுடன் மாஸ் படத்தில் இணையும் சிம்பு... ஹீரோயின் யார் தெரியுமா?

சுதா கொங்கராவுடன் மாஸ் படத்தில் இணையும் சிம்பு... ஹீரோயின் யார் தெரியுமா?

சிம்பு - சுதா கொங்கரா

சிம்பு - சுதா கொங்கரா

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து வேறு படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் சுதா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இயக்குனர் சுதா கொங்கரா தற்போது 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குகிறார். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், சுதா கொங்கரா மற்றும் ஹோம்பலே பிலிம்ஸ் இணைந்து உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் பணிபுரிவதாக அறிவிக்கப்பட்டது.

  அப்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “சில உண்மை கதைகள் சொல்லத் தகுதியானவை, சரியானவையும் கூட. ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், இயக்குனர் சுதா கொங்கராவுடன் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. எங்களின் எல்லாப் படங்களையும் போலவே, இதுவும் உங்களை ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனெர்ஜியையும் புத்துணர்ச்சியையும் தந்தார்... விஜய்யுடனான சந்திப்பு குறித்து மனோபாலா பெருமிதம்!

  Keerthy Suresh latest photo with pandian stores kathir, keerthy suresh, keerthy suresh pandian stores kumaran thangarajan, pandian stores kathir, keerthy suresh images, keerthy suresh movies, keerthy suresh latest images, கீர்த்தி சுரேஷ் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர், கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் படங்கள், கீர்த்தி சுரேஷ் கேண்டிட் படங்கள், keerthy suresh husband, keerthy suresh age, keerthy suresh images, keerthy suresh instagram, keerthy suresh mother, keerthy suresh family, keerthy suresh twitter, keerthy suresh number,
  கீர்த்தி சுரேஷ்

  இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து வேறு படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் சுதா. இது முடிந்ததும், அவர் சிம்பு படத்தை இயக்குவார் என்கின்றன தகவல்கள். இதனால் அடுத்தாண்டு பாதியில் சுதா கொங்கரா - சிம்பு படம் துவங்கும் எனத் தெரிகிறது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Keerthy suresh, Simbu