Home /News /entertainment /

கே.ஜி.எஃப் 2 தயாரிப்பாளர்களுடன் சுதா கொங்கராவின் அடுத்தப்படம்!

கே.ஜி.எஃப் 2 தயாரிப்பாளர்களுடன் சுதா கொங்கராவின் அடுத்தப்படம்!

சுதா கொங்கரா

சுதா கொங்கரா

இந்த தயாரிப்பு நிறுவனம் கடைசியாக யாஷ் நடித்த பான் இந்தியன் பிளாக்பஸ்டர் படமான 'கேஜிஎஃப் 2'-ஐ தயாரித்தது.

    ‘கேஜிஎஃப் 2’ படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுதா கொங்கராவுடன் தங்கள் அடுத்த படத்திற்கு இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வசூலை குவித்து வரும் நிலையில், தங்கள் புதிய படத்தை ‘சூரரைப் போற்று’ இயக்குனர் சுதா கொங்கரா இயக்குவார் என இன்று ட்விட்டரில் அறிவித்தது. இந்த எதிர்பாராத அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், “சில உண்மை கதைகள் சொல்லப்பட தகுதியானவை, சரியாகவும் சொல்லப்பட வேண்டும். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தில், இயக்குநர் சுதா கொங்கராவுடன் எங்களின் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எங்களின் எல்லாப் படங்களைப் போலவே இதுவும் இந்தியாவின் கற்பனையை ஈர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்ற ஒரு கதை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தயாரிப்பு நிறுவனம் கடைசியாக யாஷ் நடித்த பான் இந்தியன் பிளாக்பஸ்டர் படமான 'கேஜிஎஃப் 2'-ஐ தயாரித்தது. இப்போது இவர்களின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழ், கன்னடம் அல்லது வேறு ஏதேனும் இருமொழியில் இப்படம் உருவாகுமா எனத் தெரியவில்லை.

    தளபதி 66-ல் விஜய்க்கு அண்ணனாக வெள்ளி விழா நாயகன் மோகன்?



    கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குனர்களில் சுதா கொங்கராவும் ஒருவர். அவர் இயக்கிய 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றன. தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி