• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அஜித்துக்காக இயக்குநர் சுதா கொங்கரா செய்து வைத்திருக்கும் ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட்: வியந்து பேசிய ஜி.வி.பிரகாஷ்..

அஜித்துக்காக இயக்குநர் சுதா கொங்கரா செய்து வைத்திருக்கும் ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட்: வியந்து பேசிய ஜி.வி.பிரகாஷ்..

அஜித் | சுதா கொங்கரா| ஜி.வி.பிரகாஷ்

அஜித் | சுதா கொங்கரா| ஜி.வி.பிரகாஷ்

அஜித்துக்காக சுதா கொங்கரா தயார் செய்திருக்கும் கதையைக் கேட்ட ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களிடம் அதை பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரைப்போற்று’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    ‘சூரரைப்போற்று’ படத்தை அடுத்து சுதா கொங்கரா அஜித்துக்கு கதை சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ரசிகர்களிடம் ட்விட்டர் வாயிலாக உரையாடிய ஜி.வி.பிரகாஷிடம் ரசிகர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “அது செம்ம ஸ்கிரிப்ட். நடந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். இந்திய சினிமாவில் ‘சூரரைப்போற்று’ படத்தின் மூலம் எந்தக் கட்டத்தை அடைவார்களோ அதை விட இன்னும் சிறப்பான கதை ஒன்றை செய்திருக்கிறார் சுதா கொங்கரா. மிகப்பெரிய ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும். இயக்குநர் சுதா அந்தக் கதையை என்னிடம் சொன்னார். மிக அற்புதமான கதை. அது நடந்தால் அற்புதமாக இருக்கும்” என்று கூறினார்.

    மேலும் அஜித் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “என்னுடைய முதல் படம் ‘வெயில்’ முடிந்தவுடன் உடனடியாக நான் ஒப்பந்தமான படம் கிரீடம் தான். அவ்வளவு பெரிய ஸ்டார் ஒரு படம் இசையமைத்து முடித்த எனக்கு வாய்ப்பளித்தார். அது எனக்கு மிகப்பெரிய பிரேக். அந்தப் படத்தின் பாடல்கள் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் ரிங் டோன் கூட கிரீடம் பட பாடல் தான். அந்தப் படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. அஜித் மிகச் சிறந்த மனிதர்” என்று கூறினார்.



    அஜித் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகப்போகும் திரைப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்திருக்கும் அப்டேட்டை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: