சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்த நிலையில், தற்போது படத்தில் பணியாற்றியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.
சூரரைப் போற்று’ திரைப்படம் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய பயோபிக். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் விமான சேவையை கொடுக்கும் நோக்கில் தொழிலதிபர் ஜி.ஆர்.கோபிநாத் எடுத்துக் கொண்ட முயற்சிகளைப் பற்றியது. இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.
2020-ம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்ததால், சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகியது. அதோடு எமோஷனல் காட்சிகள் நிறைந்த இப்படம் பலரின் இதயங்களை வென்றது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு 2020-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் சூரரைப் போற்று திரைப்படம் மொத்தம் 5 விருதுகளை வென்று குவித்தது. சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளியும் அறிவிக்கப்பட்டனர். சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டது. அதோடு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்தப் படம் என மேலும் இரண்டு பிரிவுகளில் சூரரைப் போற்று படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
திருமணமான 5 மாதத்தில் பெண் குழந்தைக்கு தாயான அண்ணாத்த பட நடிகை
இந்நிலையில் தற்போது படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. அதில், “சூரரைப் போற்று படத்தின் பயணம் என் தந்தையின் மறைவில் இருந்து தான் தொடங்கியது. என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தபோது, வாசலில் நின்றிருந்த என்னை கடைசியாக கையசைத்து கூப்பிட்டார். அந்த நிகழ்வை தான் சூரரைப் போற்று படத்திலும் வைத்திருந்தேன். ஒரு இயக்குனராக சொல்கிறேன், நம்மில் பலர், நம் வாழ்வில் நடந்த சிலவற்றை படத்தில் காட்சியாக வைக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள் என நினைக்கிறேன்.
திருமணத்தை நினைத்தாலே எங்களுக்கு பதற்றமாகிறது - ஸ்ருதி ஹாசன் காதலர் சாந்தனு
என் வாழ்வில் நடந்த பல தருணங்களை சூரரைப் போற்று படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன், அதற்கு என் தந்தைக்கு நன்றி. எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், நான் தேசிய விருது வென்றதை என் தந்தையால் பார்க்க முடியவில்லை என்பது தான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என் குரு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு மணி சார் தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் வெறும் ஜீரோ தான். வாழ்க்கையை படமாக்க அனுமதித்த கோபிநாத் சாருக்கும், கோபிநாத்தாக வாழ்ந்த சூர்யாவுக்கும் மிக்க நன்றி. என் குடும்பத்துக்கு மிகப்பெரிய நன்றி” என்று தெரிவித்துள்ளார். உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.