Home /News /entertainment /

Sudeep: அரசு பள்ளியை தத்தெடுத்த சுதீப் - குவியும் வாழ்த்துகள்!

Sudeep: அரசு பள்ளியை தத்தெடுத்த சுதீப் - குவியும் வாழ்த்துகள்!

சுதீப்

சுதீப்

133 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியின் சுவர்கள் பழுதடைந்து உள்ளன.

    நடிகர் சுதீப் 133 வருடம் பழமையான அரசு பள்ளியை தத்தெடுத்திருக்கிறார்.

    இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் சுதீப். இதைத் தொடர்ந்து விஜய்யின் ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் தனது சொந்த மாநிலமான கர்நாடக மாநிலத்தில் உள்ள, சொந்த ஊரான ஷிவ்மோகாவில் ஒரு அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார் சுதீப்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    133 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளியின் சுவர்கள் பழுதடைந்து உள்ளன. மாணவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லை என்பதை அறிந்த சுதீப், இந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துக்  கொடுத்து, கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் சுதீப். இதையறிந்த ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில்  பாராட்டி வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி