ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை பார்வதி நாயர் எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தினார்- முன்னாள் ஊழியர் புகார்

நடிகை பார்வதி நாயர் எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தினார்- முன்னாள் ஊழியர் புகார்

நடிகை பார்வதி நாயர்

நடிகை பார்வதி நாயர்

தன் மீது எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தி திருட்டு பட்டம் கட்டுவதாக நடிகை பார்வதி நாயர் மீது அவர் வீட்டில் வேலை செய்த சுபாஷ் புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்து வந்ததாகவும் தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் மேலும் தன் மீது அபாண்டமான திருட்டு பட்டம் சுமத்துவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சுபாஷ் சந்திர போஸ் அளித்த பேட்டியில்,

இரவு நேரங்களில் நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன்  மது விருந்து நடத்திய போது தான் பார்த்ததால் பார்வதி நாயருக்கு தன் மீது கோபம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் வெளியில் சொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி தன்னை அன்று முதலே அநாகரிகமாக நடத்தி வந்ததாகவும் சுபாஷ் சந்திரபோஸ் பேட்டியில் கூறியுள்ளார்.

ஜி.பி முத்து காட்டுல அடை மழை.. விஜய் டிவி ஹிட் சீரியலில் என்ட்ரி?

மேலும், தன்னை பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி தன் மீது எச்சில் துப்பியதாகவும் ஆட்களை வைத்து அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் தேதி, தான் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது தன் புகார் அளித்ததால், என் மீதே புகார் அளிப்பாயா? என பார்வதி நாயர் தன்னிடம் கோபமாக பேசி  பாலியல் வன்கொமை செய்ய முயன்றதாக மீண்டும் புகார் அளிக்கவுள்ளதாக தன்னிடம் கூறினார் எனவும் சுபாஸ் சந்திர போஸ் தெரிவுத்துள்ளார்.

'சொல்ல சொன்னாங்க.. சொன்னேன்..' நடிகை ஆடை சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த சதீஷ்!

தான் திருடியதாக சொல்லப்படும் எந்த பொருட்களையுமே  இதுவரை அவரது வீட்டில் பார்க்கவில்லை எனவும் கேமராவை சார்ஜ் செய்து பார்வதி நாயர் கையிலே தான் கொடுத்துவிட்டதாகவும் வேண்டும் என்று தன் மீது திருட்டு பட்டம் கட்டுவதாகவும் பார்வதி நாயர் மீது புகாரளித்துள்ள சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

Published by:Srilekha A
First published:

Tags: Chennai, Crime News