படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மரணம்

விவேக்

படப்பிடிப்பின் போது, மின்சாரம் பாய்ந்து விவேக் சம்பவ இடத்தில் இறந்தார்.

  • Share this:
    படப்பிடிப்பில் நடந்த விபத்தில் தமிழ் ஸ்டண்ட் நடிகர் விவேக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஸ்டண்ட்மேன்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களின் தூண்களில் முக்கியமானவர்கள். பார்வையாளர்களிடமிருந்து ஹீரோக்கள் கைதட்டல்களைப் பெற தங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஆபத்தான சாகசங்களை செய்கிறார்கள். இந்நிலையில் கர்நாடகாவின் பெத்தாடியில் கன்னட திரைப்படமான 'ஐ லவ் யூ ரச்சு' படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 28 வயது ஸ்டண்ட் நடிகர் விவேக் பரிதாபமாக இறந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வினோத் என்பவர் சண்டைக் காட்சியை அமைக்க, படப்பிடிப்பின் போது, மின்சாரம் பாய்ந்து விவேக் சம்பவ இடத்தில் இறந்தார். அதோடு மற்றொரு ஸ்டன்ட்மேன் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். படத்தின் இயக்குனர் ஷங்கர் எஸ் ராஜ், தயாரிப்பாளர் குரு தேஷ்பாண்டே மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் வினோத் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வந்த, 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பெரிய கிரேன் விழுந்து நொறுங்கி மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: