ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவகார்த்திகேயன் படத்தில் கமிட்டான ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

சிவகார்த்திகேயன் படத்தில் கமிட்டான ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

சிவகார்த்திகேயன், யான்னிக் பென்

சிவகார்த்திகேயன், யான்னிக் பென்

மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்திற்கு ஹாங்காங்கை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் யான்னிக் பென் சண்டை காட்சிகளை அமைக்கிறார். 

மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க, இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும் நடிகை சரிதா தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மாவீரன் படத்திற்கு சண்டைக் காட்சி அமைக்க பிரபல சண்டை பயிற்சியாளரை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து ஹாங்காங்கை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரான யான்னிக் பென் என்பவரை சண்டை பயிற்சி இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Also read... WATCH: வெளியானது விஜய் சேதுபதியின் ’நல்லா இருமா’ பாடலின் லிரிக்கல் வீடியோ!

இவர் ஏற்கனவே கௌதம் வசுதேவ் மேனன் இயக்கிய ஜோஸ்வா,  துருவ நட்சத்திரம், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார்.  அதேபோல் ஃபேமிலி மேன் இணைய தொடருக்கும் அவர் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். மேலும் சமீபத்தில் சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா படத்திலும் யான்னிக் பென் தான் சண்டை பயிர்ச்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் யான்னிக் பென் இணைந்துள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sivakarthikeyan