Home /News /entertainment /

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

கனல் கண்ணன் முன்ஜாமின் பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எனினும் அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பெரியாரின் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய ஸ்டண்ட் மாஸ்கர் கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்  கைது செய்தனர். கடந்த 1-ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.

கனல் கண்ணனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன், சென்னை காவல் ஆணையரகத்தில் கனல் கண்ணனை கைது செய்ய கோரி புகார் அளித்திருந்தார்.

ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.  மேலும், இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால் அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டிவிடுதல், 505(1)(b)- அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

75th Independence Day: ரஜினிகாந்த் முதல் தனுஷ் வரை... சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

இந்நிலையில் கனல் கண்ணனை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் மதுரவாயல் வீட்டில் சென்று தேடி உள்ளனர். ஆனால் அவர்  அங்கு இல்லை. இதைபோல வடபழனி, வளசரவாக்கம் வீடுகளிலும் தேடியும் இல்லை என்பதால் அவர் தலைமறைவாகி விட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கனல் கண்ணன் முன்ஜாமின் பெறுவதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த முன் ஜாமின் வழக்கு விசாரணையானது கடந்த 11ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தது. கனல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்த  மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் போலீசாரின் கைதுக்கு பயந்த நடிகரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் புதுச்சேரியில் தலைமறைவானார். அவரது செல்போனை ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கனல் கண்ணனை கைது செய்தனர்.

பாண்டிச்சேரியில் கைது செய்த கனல் கண்ணனை மத்திய குற்றப்பிரிவு  போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
Published by:Shalini C
First published:

Tags: BJP, Periyar Statue, Tamil Cinema

அடுத்த செய்தி