ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சினிமா சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு… வெற்றிமாறன் பட ஷூட்டிங்கின்போது விபரீதம் ஏற்பட்டதாக தகவல்

சினிமா சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு… வெற்றிமாறன் பட ஷூட்டிங்கின்போது விபரீதம் ஏற்பட்டதாக தகவல்

உயிரிழந்த ஸ்டன்ட் பயிற்சியாளர் சுரேஷ்.

உயிரிழந்த ஸ்டன்ட் பயிற்சியாளர் சுரேஷ்.

நடந்த சம்பவம் குறித்து விடுதலை படக்குழுவினர் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில், சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் இயக்குனர்களில் முக்கியமான ஒருவரான வெற்றி மாறன், தனது தனித்துவ படைப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அடுத்ததாக 'விடுதலை' படத்தை இயக்குகிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்ட

இந்தப் படத்தில், சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படப்பிடிப்பு 2020-ல் தொடங்கியது. கதையின் விரிவாக்கம் காரணமாக, 'விடுதலை' இரண்டு பாகங்களாகத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

WATCH – மீண்டும் ரிலீஸாகும் ரஜினியின் பாபா பட ட்ரெய்லர்

மேலும் படத்தின் முதல் பாகம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நீண்ட நேரம் ரசிகர்களை காக்க வைக்க விரும்பாத வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தையும் விரைவில் வெளியிட முயற்சி செய்து வருகிறாராம்.

இதற்கிடையே, சென்னை அருகே வண்டலூரில் விடுதலை படத்தின் ஷூட்டிங்கின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிக்கி, சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்துள்ளார்.

‘சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் இருக்கிறேன்…’ – நடிகர் கஞ்சா கருப்பு வேதனை

முன்னதாக படுகாயம் அடைந்த அவர் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடந்த சம்பவம் குறித்து விடுதலை படக்குழுவினர் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Kollywood