• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அயலான் படத்தில் ஆச்சரியப்படுத்தும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்...!

அயலான் படத்தில் ஆச்சரியப்படுத்தும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்...!

அயலான்

அயலான்

அயலானில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா கோபிகர், பானுப்ரியா, கருணாகரன், பால சரவணன் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட படம் அயலான். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கம், ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என அனைவருமே பெருந்தலைகள்.

தனது படங்களுக்கு 35 கோடிகள் வர்த்தகம் இருக்கிறது என அறிந்ததும் சிவகார்த்திகேயன் தனது நண்பர் டி.ராஜாவை தயாரிப்பாளராக்கி அவரது 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என எல்லாமே பெரிய படங்கள். அடுத்து அயலான் படம் தொடங்கப்பட்டது. தயாரிப்பில் அகலக்கால் வைத்ததால் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் பல கோடிகள் கடனில் சிக்கியது. அதிலிருந்து மீள வெளி நிறுவனங்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற சொந்த நிறுவனம் தொடங்கி, தான் நடிக்கும் படங்களில் தன்னையும் ஒரு பங்குதாரராக இணைத்துக் கொண்டார். அயலானுக்குப் பிறகு தொடங்கப்பட்ட கால் டஜன் படங்கள் திரைக்கு வந்தும் அயலான் மட்டும் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

Also read... கேரளா, ஆந்திராவில் பிரமாண்டமாக வெளியாகும் மாநாடு...!

முதலாவதாக அயலான் ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம். பூமிக்கு வரும் ஏலியனை பத்திரமாக திருப்பி அனுப்புவதுதான் அயலான் படத்தின் ஒன்லைன் என்கிறார்கள். படத்தில் சிஜி எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய வருகின்றன.

சுமார் 3500 சிஜி ஷாட்கள் அயலான் படத்தில் இருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்தளவு சிஜி ஷாட்கள் தமிழில் எந்திரன், 2.0 படங்களில் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து அயலான். படத்தின் பட்ஜெட் மற்றும் சிஜி காட்சிகள் காரணமாகவே படம் தாமதமாகிறது. அடுத்த வருடம் கண்டிப்பாக அயலானை திரையில் பார்க்கலாம் என உத்தரவாதம் தருகிறார்கள்.

அயலானில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா கோபிகர், பானுப்ரியா, கருணாகரன், பால சரவணன் என ஏராளமானோர் நடிக்கின்றனர். அயலான் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என நம்பலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: