முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றிகரமாக தேள் படத்தை விற்பனை செய்த ஸ்டுடியோ கிரீன்

வெற்றிகரமாக தேள் படத்தை விற்பனை செய்த ஸ்டுடியோ கிரீன்

தேள் திரைப்படம்

தேள் திரைப்படம்

டிசம்பர் 10-ம் தேதி ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன், சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களுடன் தேளும் திரையரங்கில் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பல வருடங்கள் தயாரிப்பில் இருந்த தேள் திரைப்படத்தை வெற்றிகரமாக இன்னொரு நிறுவனத்துக்கு தள்ளிவிட்டுள்ளார் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா.

பிரபுதேவா நடிப்பில் கடைசியாக வெற்றி பெற்ற படம் எது? திடீரென இப்படி கேட்டால் பிரபுதேவாவே திணறிப்போவார். அப்படியான கஷ்டமான கேள்வி இது. சமீபத்தில் வெளியான அவரது பொன் மாணிக்கவேல் திரைப்படமும் வந்த வேகத்தில் காற்றில் கரைந்தது.

அடுத்து பிரபுதேவா நடிப்பில் வெளியாகும் படம் தேள். நடன இயக்குனரும், நடிகரும், இயக்குனருமான ஹரிக்குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் பல வருடங்கள் முன்பு தொடங்கப்பட்டது. ஒருவழியாக முடித்து இப்போது திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். டிசம்பர் 10 ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன், சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களுடன் தேளும் திரையரங்கில் வெளியாகிறது. அதற்கு முதல் நாள் ஜீ.வி.பிரகாஷின் ஜெயில் திரைப்படம் வெளியாகிறது.

தேள் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மேஜிக் ரேய்ஸ் திருவேங்கடம் வாங்கியுள்ளார். அந்தவகையில் படம் வெளியாகும் முன்பே லாபத்துடன் வெளியே வந்திருக்கிறார் ஞானவேல்ராஜா. இவரது நிறுவனம் ஜீவி.பிரகாஷ் நடிப்பில் ரிபெல் என்ற படத்தையும், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிப்பது முக்கியமானது.

பிரபுதேவா பல கெட்டப்புகளில் நடித்துள்ள பகீரா திரைப்படமும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Prabhu deva, Tamil Cinema