ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துக் கொண்ட மாணவர் - வைரலாகும் வீடியோ

கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்துக் கொண்ட மாணவர் - வைரலாகும் வீடியோ

கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளி

கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளி

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அபர்ணாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் ரசிகர்கள், கல்லூரியை கண்டித்தும் வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் கேரளாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட தங்கம் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சட்டக் கல்லூரியில், அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அவர், பின்னர் அந்த மாணவர் அபர்ணாவை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார்.

மாணவரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அபர்ணா, அங்கிருந்து விலகினார். அந்த மாணவர் பின்னர் மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்டதோடு, தான் ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டேன் என்பதற்கான விளக்கத்தை தெரிவித்த நிலையில், மேடையில் இருந்த கல்லூரி நிர்வாகிகள் யாரும் மாணவரின் நடத்தையை கண்டிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அபர்ணாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் ரசிகர்கள், கல்லூரியை கண்டித்தும் வருகிறார்கள்.

ஒருவரைத் தொடுவதற்கு முன் அவரை தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும், இந்த கல்லூரி மாணவர் சூழ்நிலையைப் பயன்படுத்த முயன்றார் எனவும் ரசிகர்கள் பலர் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். அதோடு, ஒருவரின் தோளில் கை வைப்பது அந்தரங்கமான செயல் என்றும், அதே பாலினத்தைச் சேர்ந்த அந்நியர் இதைச் செய்தால் கூட, சங்கடமான தருணமாக மாறும் என்றும் குறிப்பிட்டனர்.

சஹீத் அராபத் இயக்கும் தங்கம் படத்தில் பிஜு மேனன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கிரீஷ் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபஹத் பாசில், சியாம் புஸ்கரன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Aparna Balamurali