Home /News /entertainment /

கடக்க வேண்டிய பாலங்கள் அதிகமுள்ளது... கனடாவிலுள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் - நெகிழ்ச்சியில் இசைப்புயல்!

கடக்க வேண்டிய பாலங்கள் அதிகமுள்ளது... கனடாவிலுள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் - நெகிழ்ச்சியில் இசைப்புயல்!

மார்கம் மேயருடன் ஏ.ஆர்.ரஹ்மான்

மார்கம் மேயருடன் ஏ.ஆர்.ரஹ்மான்

நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கனடாவின் மார்கம் நகரிலுள்ள ஒரு தெருவுக்கு தனது பெயர் சூட்டப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

    முன்னதாக 2017-ஆம் ஆண்டில், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள மார்கம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு வைக்கப்பட்டது. அந்தத் தெரு 'அல்லா-ரக்கா ரஹ்மான் ஸ்ட்ரீட்' என்று எழுதப்பட்ட பெயர் பலகையைக் கொண்டிருந்தது. இப்போது அந்தத் தெருவுக்கு ஏஆர் ரஹ்மான் என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு மார்கம் நகரம் இந்தியாவின் இசை மேஸ்ட்ரோ பெயரை தங்கள் தெருவுக்கு பெயரிட்டு கௌரவித்தது.

    இதற்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதில், “மார்காம் நகரம் மற்றும் கனடா மக்களிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரத்திற்காக நான் பெருமைப்படுகிறேன் மற்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை.

    மார்கம் நகர மேயர் (பிராங்க் ஸ்கார்பிட்டி), ஆலோசகர்கள், இந்திய துணைத் தூதரக ஜெனரல்(அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடா நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏ.ஆர். ரகுமான் என்ற பெயர் என்னுடையதல்ல. இதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது பொதுவான கடவுளின் குணம், நம் அனைவரிடமும் அது உள்ளது மற்றும் எந்த ஒரு நபரும் இரக்கமுள்ளவரின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும்.

    சித்தி 2 சீரியல் கவினின் புதிய சீரியல்... ஜோடி யாருன்னு பாருங்க!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by ARR (@arrahman)






    ஆகவே, அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக. அனைத்து அன்புக்கும் இந்தியாவின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், நான் உயர உத்வேகத்தை அளித்தனர். அனைத்து லெஜெண்டுகள் உட்பட அத்தனை பேரும், சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் உத்வேகத்தை அளித்தார்கள்.



    நான் கடலில் ஒரு மிகச்சிறிய துளி. மேலும் பலவற்றைச் செய்வதற்கும், சோர்வடையாமல், ஓய்வு பெறாமல், இன்னும் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன். ஒருவேளை நான் சோர்வடைந்தாலும்... நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் உள்ளனர், கடக்க வேண்டிய பாலங்கள் அதிகமுள்ளது என்பதை நினைவில் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman

    அடுத்த செய்தி