முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: 2 மில்லியன் பார்வைகளை கடந்தது சிம்புவின் 'பத்து தல' டீசர்!

WATCH: 2 மில்லியன் பார்வைகளை கடந்தது சிம்புவின் 'பத்து தல' டீசர்!

பத்து தல

பத்து தல

சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவராஜ் சிவகுமார் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மஃப்டி. இந்தப் படம் சிலம்பரசன் நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.  சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய  கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததையடுத்து சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியானது. இந்த நிலையில் நேற்று மாலை படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியாகி 15 மணி நேரங்களை கடந்த நிலையில் தற்போது யூடியூப்பில் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

' isDesktop="true" id="903309" youtubeid="tyzikpc8Ctg" category="cinema">

நன்றி: Sony Music South.

First published:

Tags: Simbhu, Tamil Movies Teaser