Home /News /entertainment /

'என் உயிரினும் மேலான ரசிகர்களே... நீங்க இல்லாம நான் இல்ல' : ரசிகர்களுக்கு சிம்பு புத்தாண்டு வாழ்த்து

'என் உயிரினும் மேலான ரசிகர்களே... நீங்க இல்லாம நான் இல்ல' : ரசிகர்களுக்கு சிம்பு புத்தாண்டு வாழ்த்து

சிம்பு மாநாடு

சிம்பு மாநாடு

Simbu | சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    'என் உயிரினும் மேலான ரசிகர்களே...நீங்க இல்லாம நான் இல்ல' என்று குறிப்பிட்டு ரசிகர்களுக்கு சிம்பு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநாடு சக்சஸ் மீட் தொடர்பாக விரைவில் அவர் ரசிகர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிம்பு தனது வாழ்த்துப்பதிவில், என் பாசத்திற்குரிய அனைவருக்கும் வணக்கம்.

    நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும் நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம்.

    இதையும் படிங்க : கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா விஜய்யின் பீஸ்ட்? - இரு படங்களும் ஏப்ரலில் ரிலீஸ்

    இறைவனின் பெருங்கருணையால் இந்த புதிய வருடத்தை காணவிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் மாநாடு படத்தை மிகப்பெரிய வெற்றியாக பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு.

    மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021 ஆண்டை முடிக்கிறேன். 2022 ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.

    என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும் என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நலமே வாழ்க. நீங்க இல்லாம நான் இல்ல.
    இவ்வாறு சிம்பு தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு நல்ல வசூலை வாரிக்குவித்த டாப் 5 தமிழ்ப்படங்களில் ஒன்றாக மாநாடு உள்ளது. படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் சிம்பு தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை சிம்புவை ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை இயக்கிய கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.

    இதையும் படிங்க : அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை

    சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    சிம்பு அடுத்ததாக கொரோனா குமார், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். இதில் பத்து தல படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிம்புவைப் போன்று, மாநாடு படத்திற்கு பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் ஏற்கனவே இயக்கியுள்ள பார்ட்டி திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Simbhu

    அடுத்த செய்தி