Home /News /entertainment /

3 தேசிய விருதை வென்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் கதை…

3 தேசிய விருதை வென்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் கதை…

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

National Film Awards : விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் அடுத்ததாக தேசிய விருதைப் பெறவுள்ளது.

    இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை மற்றும் இதர அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

    சரஸ்வதி, தேவகி மற்றும் சிவரஞ்சனி என்ற 3 பெண்களின் வாழ்க்கையின் சில பகுதியே படமாக அமைக்கப்பட்டிருக்கும்.

    இந்த படத்தில் சிவரஞ்சனியாக லட்சுமி பிரியா சந்திரமவுலி, தேவகியாக பார்வதி மேனன், சரஸ்வதியாக காளீஸ்வரி சீனிவாசன், சந்திரனாக கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

    அரசு அதிகாரியாக இருக்கும் தேவகி மற்றும் அவரது கணவர் ஆகியோரது வாழ்க்கை ஒரு டைரியால் அதிர்வுகளுக்கு உள்ளாகிறது.

    தேசிய விருதுகளை வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்... ஆன்லைனில் எங்கு பார்க்கலாம்? ஓடிடி லிங்க் இதோ

    சிறு வயது முதலே ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் சிவரஞ்சனி, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று கோப்பைகளை பெறுகிறார். படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் நடக்க, கணவரின் விருப்பத்திற்கேற்ப சிவரஞ்சனியின் வாழ்க்கை மாறுகிறது.

    தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணாக சரஸ்வதி கேரக்டரில் காளீஸ்வரி நடித்திருப்பார். இவரது கணவர் சந்திரனாக கருணாகரன். கணவரின் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சரஸ்வதி, ஒருமுறை அவரை எதிர்த்து பேசி விடுகிறார். அன்றிலிருந்து அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுகிறது.

    இந்த மூவரின் எதார்த்த வாழ்வையும், சமூகத்தில் பெண்களின் நிலையையும் செயற்கைத் தனமின்றி படமாக்கியிருப்பார் இயக்குனர் வசந்த். சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம்தேதி வெளியான இந்த திரைப்படம், 3 பெண்களின் கதையை ஆந்தாலஜி ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கும்.

    National Film Awards : சிறந்த வசனம், அறிமுக இயக்குநர் - இரண்டு தேசிய விருதைப் பெற்ற மண்டேலா படம்! 

    ஹம்சா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்திருந்தார். விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் அடுத்ததாக தேசிய விருதைப் பெறவுள்ளது.

    சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தவிர்த்து, சிறந்த எடிட்டிங்கிற்காக இந்த படத்தில் பணியாற்றி ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சிறந்த துணை நடிகைக்காக லட்சுமி பிரியா சந்திரமவுலி ஆகியோருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 விருதுகளை அள்ளியுள்ளது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.
    Published by:Musthak
    First published:

    Tags: National Film Awards

    அடுத்த செய்தி