ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Atlee: வைரலாகும் அட்லி-ஷாருக்கான் படத்தின் கதை - எதன் காப்பியாக இருக்கும் என ரசிகர்கள் ஆராய்ச்சி

Atlee: வைரலாகும் அட்லி-ஷாருக்கான் படத்தின் கதை - எதன் காப்பியாக இருக்கும் என ரசிகர்கள் ஆராய்ச்சி

அட்லீ - ஷாருக்கான்

அட்லீ - ஷாருக்கான்

அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தின் கதையும் இணையத்தில் கசிந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கடைசியாக பிகில் படத்தை இயக்கிய அட்லி, அடுத்து ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இது அவரது முதல் வேற்றுமொழித் திரைப்படம்.

  அட்லி - ஷாருக்கான் காம்பினேஷன் உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று அட்லி ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. அத்துடன் காப்பீட் (copied) என்ற ஹேஷ் டேக்கும் வைரலாக, ரசிகர்கள் குழம்பினர். அட்லின்னு சொன்னால் கூடவே காப்பியும் வருகிறதே என விசனப்பட்டனர். அட்லியின் முதல் படம் ’ராஜா ராணி’ தொடங்கி ’பிகில்’ வரை அனைத்தும் காப்பி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தின் கதையும் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் சட்டத்தை காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரி, இன்னொருவர் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் செய்யக் கூடியவர். இவர்கள் இருவரது பாதையும் குறுக்கிடும் போது ஏற்படும் பிரச்னையும், குழப்பங்களுமே படத்தின் கதையாம். இதுதான் கதை என்பது உறுதி செய்யப்படும் முன்பே, இது எந்த இந்திய, ஹாலிவுட் படத்தின் காப்பி என்று இணையத்தில் சர்ச்சையில் இறங்கினர் ரசிகர்கள்.

  இந்தப் படத்திலாவது தன் மேல் விழுந்துள்ள ரசிகர்களின் பார்வையை சரி செய்வாரா அட்லி?

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Atlee, Shah rukh khan