• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Mint Tower: படம் சொல்லும் கதை - சார்பட்டா பரம்பரையின் மின்ட் டவர்!

Mint Tower: படம் சொல்லும் கதை - சார்பட்டா பரம்பரையின் மின்ட் டவர்!

மிண்ட் டவர்

மிண்ட் டவர்

மின்ட் டவரில் இருக்கும் கடிகாரத்தை வடிவமைத்தது கனி அண்ட் சன்ஸ் என்ற நிறுவனம். 1909-ல் ஹாஜி மிர்ஸா அப்துல் கனி நமாஸி என்ற பார்ஸியரால் ஆரம்பிக்கப்பட்டது.

  • Share this:
ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரையின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. படத்தின் போஸ்டரில் தெரிந்த டீட்டெயிலிங், ட்ரெய்லரை அதிகம் எதிர்பார்க்க வைத்தது. ரஞ்சித்தும் அவரது டீமும் ஏமாற்றவில்லை. எண்பதுகளின் வடசென்னையை தத்ரூபமாக மறுஆக்கம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக அந்தகாலகட்டத்து இடங்கள்.

ட்ரெய்லரில் காட்டப்படும் மின்ட் டவர் முக்கியமான வரலாற்றுச் சின்னம். அதை அப்படியே அந்த காலத்தில், மேம்பாலம் வருவதற்கு முன்பு இருந்தது போலவே வடிவமைத்திருக்கிறார்கள். இதற்குப் பின்னால் சின்ன சரித்திரம் உண்டு.

சென்னையில் நான்கு ஸ்டேன் - அலோன் கிளாக் டவர்கள் உண்டு. அதில் ஒன்றுதான் மின்ட் சந்திப்பில் உள்ளது; சார்பட்டா பரம்பரை ட்ரெய்லரில் காட்டப்படுவது. முன்பு கடிகாரங்கள் என்பவை ஆடம்பரப் பொருள்கள். எளிய மக்கள் கற்பனை செய்ய முடியாது. அவர்களும் நேரத்தை அறிய வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டவையே இந்த கிளாக் டவர்கள். 1948-ல் மின்ட் டவர் கட்டப்பட்டது. அப்போதைய மேயர் கிருஷ்ண ராவ் இதனை திறந்து வைத்தார். நடுவில் பல வருடங்கள் இந்த டவரில் உள்ள கடிகாரம் ஓடவில்லை. 2013-ல் சென்னை கார்ப்பரேஷனுடன் இணைந்து பி ஆர் அண்ட் சன்ஸ் பழுதுப்பார்க்கும் பணியை மேற்கொண்டது. 2014 ஜனவரி 17 முதல் மீண்டும் ஓடத் தொடங்கியது.

Sarpatta Parambarai trailer, Sarpatta Parambarai trailer review, Pa Ranjith Sarpatta Parambarai, sarpatta, sarpatta movie, sarpatta parambarai, sarpatta parambarai movie, sarpatta parambarai release date, sarpatta parambarai amazon prime, sarpatta parambarai full movie, sarpatta parambarai full story, sarpatta parambarai history, பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை, சார்பட்டா பரம்பரை திரைப்படம், சார்பட்டா பரம்பரை முழுப்படம், சார்பட்டா பரம்பரை ஆர்யா, சார்பட்டா பரம்பரை குத்துச்சண்டை, சார்பட்டா பரம்பரை வரலாறு, சார்பட்டா பரம்பரை ட்ரைலர், mint tower, chennai mint tower, மிண்ட் டவர், சென்னை மிண்ட் டவர்
சர்பட்டா பரம்பரையில் காட்டப்படும் மிண்ட் டவர்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மின்ட் டவரில் இருக்கும் கடிகாரத்தை வடிவமைத்தது கனி அண்ட் சன்ஸ் என்ற நிறுவனம். 1909-ல் ஹாஜி மிர்ஸா அப்துல் கனி நமாஸி என்ற பார்ஸியரால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதன் பெயர் சவுத் இந்தியன் கம்பெனி. பிறகு கனி அண்ட் சன்ஸ் என பெயர் மாறியது. இவர்கள்தான் மின்ட் டவரில் இருக்கும் கடிகாரத்தை வடிவமைத்தார்கள். முப்பது மணி நேரத்துக்கு ஒருமுறை இதற்கு சாவி தர வேண்டும். இந்த முறைக்கு மாஸ்டர் அண்ட் ஸ்லேவ் என்று பெயர். மாஸ்டர் கீழிருந்து சாவி தருவார், மேலேயிருக்கும் ஸ்லேவ் - அதாவது கடிகாரம் வேலை செய்யும். எளிய மனிதர்களும் நேரத்தை அறிய வேண்டும் என்ற ஜனநாயக சிந்தனையில் உதித்த டவரின் கடிகார இயக்கத்துக்கு இப்படியொரு பெயர். இன்று மாஸ்டரும், ஸ்லேவும் வடிவம் மாறிவிட்டார்கள். இரு தரப்பினருக்குமான மோதல் மட்டும் இன்னும் முடியவில்லை. சார்பட்டா பரம்பரை படமே இந்த இரு மனோபாவ மோதலின் வெளிப்பாடுதானே.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: