முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'என்னை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்...' பிரபல மலையாள நடிகர் எடுத்த திடீர் முடிவு!

'என்னை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்...' பிரபல மலையாள நடிகர் எடுத்த திடீர் முடிவு!

ஜோஜு ஜார்ஜ்

ஜோஜு ஜார்ஜ்

என் தொழில் வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை அனுபவித்து வருகிறேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தன்னை துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில் இவர் ‘ஜகமே தந்திரம்’, ‘பஃபூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் ‘இரட்டா’ என்ற படம் கடந்த 3-ம் தேதி வெளியானது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சமூக ஊடகங்களில் இருந்து விலகப் போவதாக திடீர் முடிவை அறிவித்துள்ளார்

அந்த வீடியோவில், “அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் விலகி இருந்தேன். ‘இரட்டா’ படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் அதில் ஆக்டிவாக செயல்பட முயன்றேன். ஆனால், அவதூறுகளால் மீண்டும் என்னை தேவையில்லாதப் பிரச்சினைகளுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.

என் தொழில் வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை அனுபவித்து வருகிறேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். நான் உங்கள் உதவியைக் கேட்கவில்லை. என்னை துன்புறுத்துவதை நிறுத்தினால் நன்றாக இருகும். என்னை கலைஞனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Malayalam actor