• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டிசம்பரில் வெளியாகும் ஹார்லன் கோபெனின் Stay Close...!

டிசம்பரில் வெளியாகும் ஹார்லன் கோபெனின் Stay Close...!

ஸ்டே குளோஸ்

ஸ்டே குளோஸ்

பிரிட்டனின் புகழ்பெற்ற 'தி பைவ்' வெப் தொடரை உருவாக்கியவர் ஹார்லன் கோபென். நெட் பிளிக்ஸில் 2018 இல் வெளியான 'சேஃப்' வெப் தொடரை உருவாக்கியதும் இவரே.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹார்லன் கோபென் (Harlan Coben) அமெரிக்காவின் பிரபலமான க்ரைம் கதை நாவலாசிரியர். இவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வெப் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. 'ஸ்டே குளோஸ்' என்ற பெயரில் 2012 இல் அவர் எழுதிய நாவல் வெப் தொடராக எடுக்கப்பட்டு நெட் பிளிக்ஸில் டிசம்பர் 31 வெளியாகிறது. இதற்குப் பின்னால் ஒரு வரலாறு உள்ளது.

பிரிட்டனின் புகழ்பெற்ற 'தி பைவ்' வெப் தொடரை உருவாக்கியவர் ஹார்லன் கோபென். நெட் பிளிக்ஸில் 2018 இல் வெளியான 'சேஃப்' வெப் தொடரை உருவாக்கியதும் இவரே. இந்தத் தொடர் குறித்த விரிவான விமர்சனம் நமது தளத்தில் உள்ளது. 2018 'சேஃப்' வெப் தொடரின் போது நெட் பிளிக்ஸ் கோபெனுடன் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. கோபெனின் 14 கதைகளை திரைப்படமாகவும், வெப் தொடராகவும் எடுக்க போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது.

அந்த ஒப்பந்தத்தின்படி ஜனவரி 2020 இல் 'தி ஸ்ட்ரேஞ்சர்' வெப் தொடர் வெளியானது. இது 2015 இல் இதே பெயரில் கோபென் எழுதிய நாவலை தழுவி இந்தத் தொடர் எடுக்கப்பட்டது.

அதே வருடம் ஜுன் மாதம் 'தி வூட்ஸ்' என்ற வெப் தொடரை நெட் பிளிக்ஸ் வெளியிட்டது. இது கோபென் 2007 இல் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

2021 ஏப்ரலில் 'தி இன்னசென்ட்' என்ற வெப் தொடர் வெளியானது. இதுவும் கோபெனின் நாவலை தழுவி எடுக்கப்பட்டதே. இதன் விரிவான விமர்சனமும் நமது தளத்தில் உள்ளது.

கடைசியாக 2021 ஆகஸ்டில் 'கான் ஃபார் குட்' வெப் தொடர் வெளியானது. அத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் நான்கு வெப் தொடர்கள் எடுக்கப்பட்டுவிட்டன. ஐந்தாவதாக 'ஸ்டே குளோஸ்' டிசம்பர் 31 வெளியாக உள்ளது.

Also read... சிவகார்த்திகேயனின் இருமொழிப் படம் புதிய தகவல்கள்...!

ஹார்லன் கோபெனின் நாவல்களின் சிறப்பம்சம் நம்மை நகரவிடாமல் செய்யும் விறுவிறுப்பு. கதையில் வரும் கதாபாத்திரங்களின் பின்புலங்களை அமைக்கும்விதமும், மர்மத்தை கட்டமைக்கும் முறையும் அலாதியானவை. இன்னொரு முக்கிய அம்சம், அவரது பெரும்பாலான கதைகளில் முதன்மையான பெண் கதாபாத்திரம் காணாமல் போகும்.

அது குறித்த விசாரணை பல வருடங்களுக்கு முந்தைய யாருக்கும் தெரியாத புதைக்கப்பட்ட ரகசியத்தை அம்பலப்படுத்தும். 'தி ஸ்ட்ரேஞ்சர்', 'தி வூட்ஸ்', 'தி இன்னசென்ட்', 'கான் ஃபார் குட்', அவர் உருவாக்கிய 'சேஃப்' என எல்லா கதைகளிலும் இந்த பொதுவான அம்சத்தைப் பார்க்கலாம். ஆனால், ஏற்கனவே பார்த்த கதையை, காட்சியை மறுபடி பார்க்கிற உணர்வை இவரது கதைகள் தருவதில்லை என்பது முக்கியமானது.

டிசம்பரில் வெளியாகும் 'ஸ்டே குளோஸ்' தொடரைப் பார்க்க ஹார்லன் கோபெனின் லட்சக்கணக்கான வாசகர்கள் காத்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: