பிக்பாஸ் மதுமிதா மீது காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்!

பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் "தற்கொலை செய்து விடுவேன்" என்று நடிகை மதுமிதா மிரட்டியுள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: August 21, 2019, 12:49 PM IST
பிக்பாஸ் மதுமிதா மீது காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்!
மதுமிதா
news18
Updated: August 21, 2019, 12:49 PM IST
பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளகளுடன் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.


இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், "விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

Loading...

அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம்.

அதை ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19-ம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் "தற்கொலை செய்து விடுவேன்" என்று மிரட்டி உள்ளார்" என்று புகாரில் கூறியுள்ளார்.

 

Also see...

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...