ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளி வாழ்த்துகள்.. ஜோடியாக செல்ஃபி வீடியோ வெளியிட்ட சூர்யா - ஜோதிகா!

தீபாவளி வாழ்த்துகள்.. ஜோடியாக செல்ஃபி வீடியோ வெளியிட்ட சூர்யா - ஜோதிகா!

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா

நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

  தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பல வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் திரைப்படங்கள் நடிப்பது, 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

  வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், பாலா இயக்கத்தில் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கத்திலான அடுத்த படம் என சூர்யா பல படங்களில் நடித்துவருகிறார்.

  ஜோதிகா இறுதியாக உடன்பிறப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியானது. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் Kaathal என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  அந்த திரைப்படத்தை கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டர் உடன் வெளியிட்டிருந்தனர். அதில் ஜோதிகா மற்றும் மம்மூட்டி ஆகியோரின் பழைய புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

  Also read... தீபாவளியில் தீப ஒளியாய் கோலிவுட் நடிகைகள்! க்யூட் போட்டோஸ்!

  இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவருகிறது. இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  அதில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்தை கூறிய அவர்கள் கவனமாக அனைவரும் தீபாவளியை கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor Suriya, Actress Jyothika, Deepavali