சிரஞ்சீவி-மோகன்ராஜா படத்தின் பாடல் வேலைகளை தொடங்கிய எஸ்எஸ்.தமன்!

சிரஞ்சீவியுடன் மோகன்ராஜா

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் எல்லா மொழி ரசிகர்களையும் கவரக்கூடிய அரசியல் க்ரைம் த்ரில்லர். அதன் தெலுங்கு ரீமேக் தான் சிரஞ்சீவி - மோகன் ராஜா இணையும் படம்.

 • Share this:
  இயக்குனர் மோகன் ராஜா இசையமைப்பாளர் தமனுடன் நேற்று தனது புதிய படத்தின் கம்போஸிங்கை தொடங்கினார். இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

  2017-ல் வெளியான வேலைக்காரனுக்குப் பிறகு மோகன் ராஜா படம் எதுவும் இயக்கவில்லை. தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியும் பாதி வழியில் நிற்க, அவரை தேடி வந்த வாய்ப்புதான் இந்த சிரஞ்சீவி படம். தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஏராளமான விழுப்புண்கள் பெற்று, சினிமா தான் நம்ம ஏரியா என்ற தெளிவுடன் மீண்டும் படங்கள் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் சிரஞ்சீவி. அவரது 150-வது படமாக ‘கைதி எண் 150’ வெளியானது. இது தமிழில் வெளியான கத்தி படத்தின் ரீமேக். அடுத்து ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்தார். தற்போது கொரட்டல சிவா இயக்கத்தில் ஆச்சார்யா படத்தில் தனது மகன் ராம் சரணுடன் நடித்து வருகிறார். இதையடுத்து சிரஞ்சீவியின் 153-வது படமாக மோகன் ராஜா இயக்கும் படம் தயாராகிறது. எஸ்.எஸ் தமன் இசையமைக்கிறார். இதற்கான கம்போஸிங்தான் நேற்று தொடங்கியது. இது மலையாள ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் எல்லா மொழி ரசிகர்களையும் கவரக்கூடிய அரசியல் க்ரைம் த்ரில்லர். சிரஞ்சீவிக்கும், அவரது மகன் ராம் சரணுக்கும் படம் பிடித்துப்போக, படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை வாங்கினர். முதலில் இந்த ரீமேக்கை சாஹோ இயக்குனர் சுஜித் இயக்குவதாக இருந்தது. பிறகு திடீரென அவரை மாற்றி இந்த வருடம் ஜனவரியில் மோகன் ராஜா படத்தை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து பூஜையும் போட்டனர்.

  மலையாள லூசிபரில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். வில்லனின் மனைவி கதாபாத்திரம் அது. டீன்ஏஜ் பெண்ணிற்கு அம்மாவும் கூட. நயன்தாரா நடிக்க ஒத்துக் கொள்வது கடினம் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: