Home /News /entertainment /

லைகாவை நோஸ்கட் செய்த ராஜமவுலி...!

லைகாவை நோஸ்கட் செய்த ராஜமவுலி...!

லைகா

லைகா

Lyca: தமிழ்நாட்டின் விநியோக உரிமையை பெற்றிருந்தும் ஆர் ஆர் ஆர் பட தயாரிப்பாளர், இயக்குனர் தங்களுடைய வெளியீட்டு தேதி குறித்து லைகாவுடன் எந்தவிதத்திலும் கலந்து பேசவில்லை என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

  • News18
  • Last Updated :
லைகா நிறுவனம் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறது. ராஜமவுலியை அழைத்து சென்னையில் லைகா பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியது. இது தொடக்கம்தான் இன்னும் இதைவிட மேலான பணிகளை ஒன்றிணைந்து செய்ய இருக்கிறோம் என லைகா பெருமையுடன் அறிவித்தது. ஆனால் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் லைகாவை நோஸ்கட் செய்துள்ளது ஆர் ஆர் ஆர் தயாரிப்பு தரப்பு.

கடந்த வருட இறுதியில் கொரோனா அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம், அஜித்தின் வலிமை உட்பட பிரமாண்ட படங்கள் அனைத்தும் தங்கள் வெளியீட்டை தள்ளி வைத்தன. இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு படங்களாக வெளியாக இருக்கின்றன. தங்கள் வெளியீட்டு தேதியையும் அறிவித்து வருகின்றன.

பிப்ரவரி மாதம் வெளியாவதாக இருந்த லைகாவின் டான் திரைப்படத்தை மார்ச் 25 ஆம் தேதி வெளியிடுவதாக இரு தினங்கள் முன்பு அறிவித்தனர். படத்தின் நாயகனும், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சிவகார்த்திகேயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது வெளியான சில நிமிடங்களில் அதே மார்ச் 25 ஆம் தேதி ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை வெளியிடுவதாக அப்படத்தின் தயாரிப்பு தரப்பு இயக்குனர் ராஜமவுலியின் சம்மதத்துடன் வெளியிட்டது. தமிழகத்தில் லைகா தயாரித்திருக்கும் டான் வெளியாகும் அதே நாள் அவர்கள் விநியோகிக்கும் ஆர் ஆர் ஆர் படமும் வெளியானால் இரு படங்களின் வசூலும் பாதிக்கப்படும். இது நேரடியாக லைகாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Also read... வெற்றிமாறன் திரைக்கதையில் மீண்டும் இயக்குனராகும் அமீர்...!

தமிழ்நாட்டின் விநியோக உரிமையை பெற்றிருந்தும் ஆர் ஆர் ஆர் பட தயாரிப்பாளர், இயக்குனர் தங்களுடைய வெளியீட்டு தேதி குறித்து லைகாவுடன் எந்தவிதத்திலும் கலந்து பேசவில்லை என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
இது லைகாவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஆர் ஆர் ஆர் படத்தின் தயாரிப்பில் தாங்களும் ஒருவர் என காட்டிக் கொண்டிருந்த அவர்களுக்கு மிகப்பெரிய நோஸ்கட் ஆக இது அமைந்துள்ளது. டான் படத்தின் வெளியீட்டு தேதியை லைகா கடைசி நிமிடத்தில் மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lyca, Rajamouli

அடுத்த செய்தி