RRR: தள்ளிப் போகும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

படத்தை ஆரம்பிக்கையில் 2021 ஜனவரி பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர்.

  • Share this:
    ராஜமௌலியின் பிரமாண்ட சரித்திரப் படம் ஆர்.ஆர்.ஆர் மீண்டும் தள்ளிப் போகிறது.

    பாகுபலியின் வெற்றிக்குப் பின் ராஜமௌலி தொடங்கிய படம் ஆர்ஆர்ஆர். ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் 2018 நவம்பரில் இந்தப் படம் தொடங்கப்பட்டது. அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்க, செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். பாகுபலியைப் போல இந்தப் படத்துக்கும் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரது கதையை மேலோட்டமாக தழுவி இந்தப் படம் தயாராகிறது.

    படத்தை ஆரம்பிக்கையில் 2021 ஜனவரி பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர். கொரோனா முதல் அலையில் படப்பிடிப்பு பாதிக்கப்பட, 2021 அக்டோபர் 13-க்கு பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். இரண்டாவது அலையில் பிற படங்களின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்ட போதும், ராஜமௌலி அக்டோபரில் படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார். ஆனால், அவரையும் மீறி பட வெளியீடு தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

    இந்த வருடம் ராம் சரண் ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் அதிக அளவில் கலந்து கொள்ளவில்லை. சிரஞ்சீவியும், அவரும் நடிக்கும் ஆச்சார்யா படத்தில் அதிக கவனம் செலுத்தினார். அதேபோல் ஜுனியர் என்டிஆரும் திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் ஏப்ரலில் முடித்து, அக்டோபரில் படத்தை வெளியிடுவதே திட்டம். இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில், ஊரடங்குவேறு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் வெளியீடு சாத்தியமேயில்லை என்று படக்குழுவினரே கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் 2022 ஜனவரியில் சங்கராந்தியை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
    விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: