Home /News /entertainment /

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ஆர் ஆர் ஆர் ரிலீஸ்

ஆர் ஆர் ஆர் ரிலீஸ்

மார்ச் 25ஆம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிடுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாகுபலி படங்களுக்குப் பிறகு வெளிவரும் ராஜமவுலியின் திரைப்படம் என்பதால் ஆர் ஆர் ஆர் படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பல வெளியீட்டு தேதிகளை கடந்து 2022 ஜனவரி 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றும் படம் வெளியாகவில்லை. கொரோனா அதிகரிப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பட வெளியீட்டை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்நிலையில் மார்ச் 25ஆம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிடுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருவதாலும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு ஊரடங்கும் வார இறுதி முழுநாள் ஊரடங்கும் தளர்த்தப்பட்டு உள்ளதாலும் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளது.  ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை தமிழகத்தில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

அதே மார்ச் 25-ஆம் தேதியில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படம் வெளியாவதாக இன்று அறிவித்தனர். ஆர் ஆர் ஆர் மார்ச் 25-ம் தேதி வெளியாவதால் டான் திரைப்படம் தனது வெளியீட்டு தேதியை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக திரையுலக வட்டாரம் தெரிவிக்கிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Rajamouli, Ram Charan

அடுத்த செய்தி