ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஸ்கர் நாமினேஷனில் நாட்டு நாட்டு பாடல்... RRR படக்குழுவினரை வாழ்த்தும் ரசிகர்கள்!

ஆஸ்கர் நாமினேஷனில் நாட்டு நாட்டு பாடல்... RRR படக்குழுவினரை வாழ்த்தும் ரசிகர்கள்!

ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்

பல ரசிகர்கள் எஸ்.எஸ்.ராஜமெளலி உள்ளிட்ட குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் RRR பட பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது.

ராஜமௌலியின் RRR 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலில் இப்படம் இடம்பிடித்துள்ளதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, எனெர்ஜியான பாடலான நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. படம் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம்பிடித்ததையடுத்து, #RRRForOscars என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது. கோல்டன் குளோப் விருதை வெல்வது மிக முக்கியமான ஒன்றாகும். 95வது அகாடமி விருதுகளுக்கான ஷார்ட்லிஸ்ட்டில் இப்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் இடம்பிடித்ததையடுத்து, படக்குழுவினருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாரிசு ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிப்பு... சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?

”நீங்கள் அனைவருக்கும் நம்பிக்கையை அளித்தீர்கள், நீங்கள் உண்மையிலேயே இந்தியாவின் பெருமை” என ரசிகர் ஒருவர் இயக்குநர் ராஜமெளலிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இதுபோல் பல ரசிகர்கள் எஸ்.எஸ்.ராஜமெளலி உள்ளிட்ட குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajamouli, Ram Charan