• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • RRR: ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் கர்ஜனை - படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

RRR: ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் கர்ஜனை - படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஆர் ஆர் ஆர் டீசர்

ஆர் ஆர் ஆர் டீசர்

ஆர்ஆர்ஆர் கதாபாத்திரங்களின் அறிமுக டீஸர் அல்லது பொதுவான டீஸர் நாளை காலை வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • Share this:
    கர்ஜனை என்றதும் த்ரிஷா நடித்திருக்கும் கர்ஜனை படம் என நினைக்க வேண்டாம். நாளை காலை 11 மணிக்கு Roar of RRR என ஆர்ஆர்ஆர் படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இன்றைய தேதியில் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் படம் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் என்றால் மிகையில்லை. பாகுபலி இரு பாகங்களில் அவர் சம்பாதித்த உடமை இது. ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பில் லைகாவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. ராஜமௌலி படத்தை இயக்க, அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் படத்தின் கதையை எழுதியுள்ளார். இசை கீரவாணி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆர்ஆர்ஆர் இந்த வருடம் சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 2021 ஜனவரியில். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட, 2021 அக்டோபரில் படம் வெளியாகும் என்றனர். இரண்டாம் அலை மீண்டும் படப்பிடிப்பை முடக்கியது. படம் அறிவித்தபடி வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது ஆந்திரா, தெலுங்கானாவில் படப்பிடிப்பு அனுமதிக்கப்பட, ஆர்ஆர்ஆர் படக்குழு மீண்டும் சுறுசுறுப்படைந்தது. சென்றவார தகவலின்படி இரு பாடல்கள் மட்டுமே இனி எடுக்கப்பட வேண்டும். மேலும் சில பேட்ச் வொர்க்குகள். இதனால், திட்டமிட்டபடி படம் அக்டோபரில் வெளியாகும் என்கின்றனர். அதற்கேற்ப படக்குழுவும் Roar of RRR At 11 AM என்று அறிவித்துள்ளனர்.

    கதாபாத்திரங்களின் அறிமுக டீஸர் அல்லது பொதுவான டீஸர் நாளை காலை வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: