ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லாஸ் ஏஞ்சல்ஸில் 98 விநாடிகளில் விற்றுத் தீர்ந்த RRR பட டிக்கெட்!

லாஸ் ஏஞ்சல்ஸில் 98 விநாடிகளில் விற்றுத் தீர்ந்த RRR பட டிக்கெட்!

RRR படக்குழுவினர்

RRR படக்குழுவினர்

இந்தப் படம் இரண்டு தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்படும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் 98 விநாடிகளில் விற்று தீர்ந்துள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர்திரைப்படம், ஜனவரி 9 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள TCL-ன் சீன திரையரங்கில் திரையிடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய IMAX திரையரங்கில் திரையிடப்படும் இந்தப் படத்தின் டிக்கெட்டுகள் வெறும் 98 வினாடிகளில் விற்றுத் தீர்ந்தன. இந்தத் திரையிடலில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பியாண்ட் ஃபெஸ்டின் ஒரு பகுதியாக இந்தத் திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 11-ம் தேதி நடைபெறவுள்ள கோல்டன் குளோப்ஸ் 2023 விருது விழாவில் RRR திரைப்படம் இரண்டு பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக, லாஸ் ஏஞ்சல்ஸின் சீன திரையரங்கில் RRR திரையிடப்படுகிறது. அதில் தான் 98 வினாடிகளில் மொத்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இதனை பியாண்ட் ஃபெஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

RRR படத்தின் கதையை விஜயேந்திர பிரசாத் எழுத, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார். இந்தப் படம் இரண்டு தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்தனர். இப்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பல பரிந்துரைகள் மற்றும் விருதுகளை பெற்றது. ஆஸ்கார் 2023 விருது விழாவுக்கு RRR திரைப்படம் 14 பிரிவுகளில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Oscar Awards, Rajamouli, Ram Charan