ஹைதராபாத்தின் கச்சிபௌலியில் நடைபெற்ற கிரீன் இந்தியா சேலஞ்சில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூவரும் தங்களது RRR திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே ராஜ்யசபா எம்பி ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார், ஆர்ஆர்ஆர் குழுவினருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். பிஸியான சூழலிலும் பசுமை இந்தியா சவாலில் (கிரீன் இந்தியா சேலஞ்ச்) பங்கேற்றதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அப்போது ஜூனியர் என்டிஆர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பசுமையை வளர்ப்பதன் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்துக் கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க பாடுபட வேண்டும் என்றார்.
நடிகர் ராம் சரண் முன்பே பசுமை இந்தியா சவாலில் பங்கேற்றதாகவும், நாற்றுகளை நடுவது தனது ஆர்வத்தை மேலும் தூண்டியதாகவும் கூறினார். RRR வெளியீட்டிற்கு முன், மீண்டும் பசுமை இந்தியா சவாலில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
எம்.பி ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார், சமூக நலன் மீது அக்கறை கொண்டு, நாடு முழுவதும் பசுமையை விரிவுபடுத்தும் உணர்வைத் தூண்டுவதற்காக RRR குழு அவரை பாராட்டியது.
விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?
நிகழ்ச்சியில், ராஜ்யசபா எம்.பி. ஜோகின்பள்ளி சந்தோஷ் குமார், திரைப்படங்கள் குறித்து பேசினார். குறிப்பாக
சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் கருணாகர் ரெட்டி, ராகவ் எஸ் மற்றும் பிற கிரீன் இந்தியா சேலஞ்ச் இணை நிறுவனர்களும் கலந்து கொண்டனர்.
Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!
இந்நிலையில், எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர்
திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். அதோடு சமுத்திரக்கனி, அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் மற்றும் ஷ்ரேயா சரண் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.